Yarl IT Hub

புதிய பயணங்கள்!

அன்பான மாணவர்களே,

இப் புதிய பயணங்கள் எனும் செயற்றிட்டமானது பாடசாலை மாணவர்களுக்குப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், புத்தாக்கத்திறன், விஞ்ஞான ஆய்வுத் திறன் போன்றவற்றை வளர்க்கும் முகமாகவும் அவர்களது திறன்களை வெளிக்கொணரவும் மற்றும் அவர்கள் தாமாக முன்வந்து சுய கற்றலில் ஈடுபடவும் ஒரு களமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான வடமாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இச்செயற்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.

இப்பயணமானது மூன்று நிலைகளை உள்ளடக்கியது.

ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு வழிகாட்டல் புத்தகம் வழங்கப்படும்.

ஒவ்வொரு நிலைகளையும் நிறைவு செய்யும் மாணவர்கள் அடுத்த நிலைக்குச் செல்வார்கள்.

மூன்று நிலைகளையும் நிறைவு செய்யும் முதல் 100 மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்.

ஆர்வம் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் இச் செயற்றிட்டத்தில் பங்கு கொள்ள அழைக்கின்றோம்!

கீழ் உள்ள இணைப்பினூடாக தரவிறக்கம் செய்ய முடியும்.