Yarl Geek Challenge Season 12 – Junior

Yarl Geek Challenge Junior is a school level IT competition organized by Yarl IT Hub to encourage school children to use their creativity and create IT solutions

This year’s competition is based on the following areas

  • Mobile Application Development

  • Web App/Website Development

  • Hardware Application Development

  • Application of Science

Students are free to select any of the above areas to develop their applications.

Showcase-Flat-Presentation

Yarl Geek Challenge Junior - அறிமுகம்

Yarl Geek Challenge Junior என்பது பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும்கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் அமைப்பினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் ஒரு போட்டியாகும்.

இப்போட்டி வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து வடமாகாணம் முழுவதிற்குமாக நடாத்தப்பட்டுவருகின்றது. இப்போட்டியில் மாணவர்கள் தனியாகவோ அல்லது அதிகபட்சமாக மூன்று உறுப்பினர்களை கொண்ட குழுவாகவோ பங்குகொள்ளலாம். குழுவாகப் பங்குகேற்பது வரவேற்கத்தக்கது.

போட்டிகள், பின்வரும் நான்கு பிரிவுகளில் இடம்பெறும். மாணவர்கள் விரும்பிய ஒரு பிரிவைத் தெரிவுசெய்து அதற்குரிய வகையில் தமது செயற்றிட்டத்தினைச் செய்யலாம்.

Web application development
மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை Web application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்

Mobile application development
மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை ஏதாவது ஒரு இயங்குதளத்திற்கு Mobile application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்

Hardware application development
மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை Hardware application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்

Application of Science
மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை விஞ்ஞானத்தின் பிரயோகம் மூலமான தயாரிப்பு ஒன்றாக முன்வைக்கலாம்


YGC Junior - Timeline



12
மே
2023

விண்ணப்பித்தல்

  • மாணவர்கள் கீழே தரப்பட்ட கூகிள்(Google) படிவத்தினூடாக விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பப்படிவம் -
    http://www.yarlithub.org/ygc-junior-application/
    அல்லது
    மாணவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை (விண்ணப்பப் படிவம் கீழே உள்ளது ) நிரப்பி மின்னஞ்சல் ஊடாகவோ தபாலினூடாகவோ அனுப்பலாம். மின்னஞ்சலூடான விண்ணப்பங்கள் அனைத்தும் event@yarlithub.org என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். தபாலூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

    Yarl Geek Challenge Junior - Season 12
    ஊக்கி,
    இல 124, இராசாவின் தோட்டம் வீதி,
    நல்லூர், யாழ்ப்பாணம்.
    Apply Now

    விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்யவதற்கு
    Download Application

வலயமட்ட போட்டிகள்

  • வலயமட்ட போட்டிகள் ஜூன் மாத ஆரம்பத்தில் இடம்பெறும்

ஜூன் மாத
ஆரம்பத்தில்


ஜூன்
2023

இறுதி மதிப்பீடு

  • இறுதி மதிப்பீடு ஜூன் மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும்


YGC Season 12 Junior

Read Prospectus

Download Application